SVP COACHING FOR CMA COURSE AT C. A. H. COLLEGE , MELVISHARAM.
வாலாஜாபேட்டை
எஸ் வி பி ஆடிட்டர் கோச்சிங் கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து பிகாம் மற்றும் பிபிஏ பயிலும் மாணவர்களுக்கு சிஏ மற்றும் சி எம் ஏ படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன...
இத்திட்டத்தில் கலந்துகொண்டு சி எம் ஏ பவுண்டேஷன் டிசம்பர் 2023 அகில இந்திய தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் எஸ்விபி ஆடிட்டர் கோச்சிங் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்..
SVP COACHING FOR CMA COURSE AT MMES COLLEGE FOR WOMEN AT MELVISHARAM
மேல்விஷாரம் எம் எம் இ எஸ் மகளிர் கலைக்கல்லூரியில் ஆடிட்டர் தகுதிக்கான சி எம் ஏ படிப்புக்கான பகுதி நேர பயிற்சி திட்டம் துவக்க விழா.... இன்று 10 / 02/ 2024 கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது..
கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் திரு . அனீஸ் அகமது அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி ப்ரீடா ஞான செல்வம் அவர்கள், துணை முதல்வர் திருமதி சசிரேகா அவர்கள், மற்றும் பேராசிரியை திருமதி லோகநாயகி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
வாலாஜாபேட்டை எஸ் வி பி ஆடிட்டர் கோச்சிங் கல்லூரியின் தாளாளர் மற்றும் முதல்வர் சிறப்புரை ஆற்றினார்...